மன்னாரில் 12 – 19 வயதிற்குற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி!

மன்னாரில் 12 தொடக்கம் 19 வயதிற்குற்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறையினர் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியர்களின் விசேட ஆலோசனையை பெற்ற பின்னர் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.

இச் செயற்பாடு, நாளை மற்றும் நாளை மறுதினம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply