வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, அராலி மத்தி கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு கிளை வீதிகள் மற்றும் உடையார் வீதி என்பன நேற்று புனரமைக்கப்பட்டுள்ளன.
நீண்டகால புனரமைக்கப்படாது காணப்பட்ட இவ் வீதியால் பயணிக்கும் சிறுவர்கள், முதியோர்கள், மாணவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 13 ஆம் வட்டார உறுப்பினர் கந்தையா இலங்கேஷ்வரனின் பரிந்துரைக்கு அமைய இவ் வீதி நேற்று புனரமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப் புனரமைப்பிற்காக ரூபா ஒரு மில்லியன் பிரதேச சபையால் ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.