காட்டுயானைகளின் அச்சத்தின் மத்தியில் வாழும் மக்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்மடுநகர் பகுதியில் அறுவடை காலங்களில் மட்டும் வந்து பயிர்களை அழித்துவந்த காட்டுயானை தற்பொழுது அறுவடைமுடிந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தற்பொழுதும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தினமும் இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளுக்குள் வரும் யானைகள் பயன்தரக்கூடிய பயிர்களை அழித்துவருகிறது.

மிக அச்சத்தின் மத்தியில் ஒவ்வோருநாளும், கடக்கவேண்டிய நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மின்வேலி அமைத்துதருவதாக பலவருடம் எம்மை ஏமாற்றிவருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எம்மையும் எம் உடமைகளையும் யானை அழித்தபின்னரா மின் வேலி அமைக்கப்படும் என மிக வேதனையுடன் தமது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளனர் .

எனவே மக்களின் நலனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே, அனைவரினதும் ஆவலாக உள்ளது.

Leave a Reply