முதலைக்கடிக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள, ஓலுவில் களியோடை ஆற்றில் முதலைக் கடிக்குள்ளாகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் அட்டடைப்பள்ளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகையா ஞானசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந் நபர் கடந்த இரண்டாம் திகதி வீட்டில் இருந்து மாடுகளுக்கு புல்வெட்டுவதற்காக ஓலுவில் களியோடை ஆற்றின் கரைப்பகுதிக்குச் சென்ற நிலையில் வீடுதிரும்பாத அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை ஒலுவில் களியோடை ஆற்றில் முதலைக்கடிக்குள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply