பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சி!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது 40 கிலோ மீற்றர் வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply