பாடசாலைகளை திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை – ஹேமந்த

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் நேரடி தொடர்பு இல்லை என சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், பாடசாலைகளை மீண்டும் திறப்பது மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது இரண்டு வெவ்வேறு அம்சங்கள் என்று நிபுணர் குழு திட்டவட்டமாக கோடிட்டுக் காட்டியதாக அவர் கூறினார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது நாட்டில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தாமதமான தேர்வுகள் எதிர்காலத்தில் எவ்வாறு நடத்தப்படும் என்பதற்கான வாய்ப்புகள் போன்ற காரணிகளையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

இருப்பினும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்போது, ​​விஞ்ஞானத் தரவு மற்றும் நிபுணர் குழு முன்வைக்கும் பரிந்துரைகளின்படி தனித்தனியாக முடிவு செய்யப்படும் என்றும் அவர் சட்டிக்காட்டினார்.

இவை இரண்டும் எதிர்காலத்தில் சரியான நேரத்தில் நடக்கும் என்று கூறிய அவர், ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று அவசியமில்லை என மீண்டும் வலியுறுத்தினார்.

Leave a Reply