அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த கார்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று (05) காலை சிறிய கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பின்னதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் சாரதிக்கு எத்தகைய காயமுமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சாரதி இன்று காலை கொழும்பு செல்வதற்காக பின்னதுவ நுழைவாயிலின் மூலமாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து 97 கிலோ மீட்டர் வந்தவுடன் வாகனத்தில் இருந்து புகை எழுந்துள்ளது.

இதனால் காரை ஓட்டியவர் காரில் இருந்து ஓடியதோடு திடீரென புகை அதிகரித்து கார் தீப்பிடித்து எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் பின் இருக்கைகளும் தீயில் சேதமடைந்துள்ளது.

பின்னதுவ பொலிஸ் நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தீயை அணைத்ததாகவும் பின்னதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply