பயங்கரவாதிகளை தியாகிகளாக போற்றுகிது பாகிஸ்தான்- இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி இங்கு அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான் கான், ‘ஒசாமா பின்லேடன்’ போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாகப் போற்றுகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் அமர்நாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்குள் நடக்கும் இந்த விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்க இவை தகுதியற்றவவை. சட்ட விரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply