அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பை வழங்குங்கள்! உயர் நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த எட்டு அரசியல் கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு கைதிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு அறிவிக்கும்படி சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அனுராதபுரம் சிறையில் உள்ள எட்டு அரசியல் கைதிகள் சார்பாக உயர் நீதிமன்றில் சட்டத்தரணி சுமந்திரனால் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வட மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு தங்களை மாற்றுமாறும், தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply