கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்தமையினால் 6 பேர் உயிரிழப்பு- பலர் கவலைக்கிடம்!

கர்நாடகா- ஹூவினஹடகலி தாலுகாவிலுள்ள மகரப்பி கிராமத்தில், அசுத்தமான தண்ணீரை குடித்தமையினால்,  இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பிட்ட கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும்போது, பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்தே குடிநீரைக் குடித்த பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply