த. தே. கூட்டமைப்பு-இந்திய வெளியுறவு செயலாளர் நேற்று சந்திப்பு!

‘அரசமைப்பின் 13வது திரத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அதிகாரப்பரவலாக்கல் இடம்பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின்வாங்கவில்லை. உடனடியாக தேர்தலை நடாத்தி, மாகாண சபை முறையை அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்குகின்றோம். எனினும் 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்ற ஒரு விடயத்திலாவது தமிழ் தரப்புக்கள் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் தரப்புக்களின் கோரிக்கை அழுத்தமாக இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு’.இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்லா.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் எம்.பி., மானவ சேனாதிராஜா (முன்னாள் எம்.பி), செல்வம் அடைக்கலநாதன் எம். பி, மற்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply