பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு புதிய பதவி!

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண புகைத்தல்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் வைத்து இந் நியமனக் கடிதத்தை பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று பெற்றுக்கொண்டார்.

புகையிலை மற்றும் மதுபானங்கள் சட்டம் எண் 27 od 2006 இன் கீழ் தேசிய ஆணையத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின் படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply