மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தமையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்றனர்.
எனினும், உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில், உடனடியாக மன்னார் பிரதேசச் செயலாளர்; ம.பிரதீப் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
மன்னார் பிரதேசச் செயலாளரின் துரித நடவடிக்கையால், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மன்னார் நகர சபையினர் குறித்த வெள்ளப்பாதிப்பு காணப்படும் பகுதிகளில் நேரடி சென்று பார்வையிட்டனர்.
அத்துடன், இந்தப் பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் தற்காலிகமாக வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் செயற்பாட்டில் தற்காலிக வடிகால் அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நேரடியாக மழை நீரை கடலுடன் கலப்பதற்கு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.