சதோசவில் பூண்டு மோசடி நடைபெற்றுள்ளதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன் -பந்துல குணவர்தன

சதோச வணிக நிலையத்தில் பூண்டு மோசடி நடந்ததை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றேன் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிறுவனத்தில் இத்தகைய மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் இது சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் டெண்டர் நடைமுறைக்கு வெளியே முறைகேடாக சட்டவிரோதமாக ஏலங்கள் பெறப்பபட்டுள்ளதாகவும் அது தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு எதிர்பாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இத்தகைய மோசடி கொள்முதல் நடைமுறைக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனால் தலைவர் மற்றும் செயலாளர் அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கைகளில் எத்தகைய சம்பந்தமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply