அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயார் – இலங்கை மின்சார வாரியம்

தேசிய வளங்களை வெளிநாடுகளில் விற்பனை செய்யும் அரசின் முடிவு மாறாவிட்டால் பாரிய வேலைநிறுத்தத்தை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை மின்சார வாரியத்தின் ஊடக அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்து வெளியிடும் போதே அழைப்பாளர் ரஞ்சன் ஜெயால் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

“தொழிற்சங்க போராட்டங்கள் காரணமாக நாட்டின் நிலைமை மிகவும் மோசமானததாக காணப்படுகின்றது.

அத்தோடு அரசாங்கம் பிடிவாதமாகவும், தன்னிச்சையாகவும் தொடர்ந்து செயல்பட்டால் தற்போதைய அரசாங்கத்தை அரியணையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மின்சார வாரியம் , துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலியம் போன்ற முக்கிய துறைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அது தான் எங்கள் இறுதி நடவடிக்கையாக இருக்கும். எங்களை அத்தகைய நிலைமைக்கு எங்களை கொண்டு வந்து விடாதீர்கள்.

அத்தோடு அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply