ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஓட்டோ சாரதிகள் எதிர்ப்பு!

அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஓட்டோ சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று, சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகை முன்வைத்து ஆதிபர், ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தங்கல்லை பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தக்கு தங்கல்ல ஓட்டோ சாரதிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தங்கல்ல பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த ஓட்டோ சாரதிகள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, தங்கல்ல பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்பின், அதிபர், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.

Leave a Reply