இன்று ஆசிரியர் தினமல்ல எமக்கு கறுப்பு தினம்-வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!

வவுனியாவில் ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா, தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் எனவும், இலவசக் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவச கல்வியைத் தனியார் மயப்படுத்தாது, அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கி பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகாகத்து அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாது, ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தமையுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

மேலும், அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இலவச கல்வியைத் தனியார் மயப்படுத்துவதை நிறுத்தி சுபோதினி அறிக்கையில் முன்வைக்கப்பட்டபடி உரிய தீர்வை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி கிராமப் புற பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கினால் மட்டுமே ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள்.

ஆசிரியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நேர காலம் பாராது சேவை செய்வார்கள், எமது பிரச்சினை தீர்க்கப்படும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply