ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட முடியாது! ஜோசப் ஸ்டாலின்

நாட்டில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் எனவும் இல்லாவிடில் எத்தகைய சந்தர்ப்பத்திலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தை கைவிட முடியாது எனவும் இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு சிகரெட்டின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதன் மூலம் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திறன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவுக்கு எந்த தர்க்கரீதியான அடிப்படையும் தொடர்பும் இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் பிரியங்கா துனுசிஹ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply