வல்லிபுர கோவிலில் பழைய நிர்வாகத்தினரால் புதிய நிர்வாகத்தினருக்கு பிரச்சனை

வல்லிபுர ஆழ்வார் கோவிலின் பழைய நிர்வாகத்தினரின் அத்துமீறிய தலையீட்டில் 27.06.2021 சுகாதார விதிமுறைகளை மீறி பூசை இடம்பெற்றதாகவும் கடந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற பூசைக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என வல்லிபுரஆழ்வார் கோவில் புதிய நிர்வாக செயலாளர் வேலாயுதம் சிறிஞானசம்பந்தர் தெரிவித்துள்ளார்.

இன்றையதிம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது

தற்போது கொரோனா மூன்றாவது அலை இடம்பெறுகின்ற நிலையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொது மக்களின் நன்மை கருதி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் சுகாதார நடைமுறையை பின்பற்றி ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குக.

தூர இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தமது வருகையினை மட்டுப்படுத்தி கொள்வதன் மூலம் ஆலய நிர்வாகத்தினருக்கும் தமது ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றார்.

Leave a Reply