ஒருதடவை செலுத்தும் புதிய தடுப்பூசி அமெரிக்கா கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் ஜொன்சன் எண்ட் ஜொன்சன் நிறுவனம் ஒருதடவை செலுத்துகை மூலம் கொவிட் பரவலை கடுப்படுத்தக் கூடிய தடுப்பூசியொன்றை தயாரித்துள்ளது.

இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்காக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் இரண்டு செலுத்துகைகள் செலுத்திய பின்னரே கொரோனாவுக்கு எதிராக செயற்படுகின்றன.

இந்நிலையில், குறித்த தடுப்பூசி வேகமாகப் பரவி வரும் டெல்டா திரிபு மற்றும் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய்களுக்கு எதிராக வீரியத்துடனும் நீடித்தும் செயல்படுவது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்தளவானோருடனான குழுவொன்றைக் கொண்டு அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளுக்கமைய, பைஸர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளைப் போலவே இந்த தடுப்பூசியும் தீவிரமாக பரவும் திரிபுக்கு எதிராக செயற்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு வெவ்வேறான ஆய்வுகளின் முன்வைப்புகளுக்கமைய இது உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது. டெல்டா திரிபு (பி .1.617.2) கடந்த 2020 ஒக்டோபரில் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் உலக சுகாதார நிறுவனம் இதனை கடந்த மே மாதத்தில் ‘ஆபத்துமிக்க திரிபு’ என்று பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரிபானது சுமார் 92 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பதிவாகும் புதிய தொற்றாளர்களில் 90 சதவீதமானோருக்கும், அமெரிக்காவில் பதிவாகும் புதிய தொற்றாளர்களில் 20 சதவீதமானோரிடையேயும் டெல்டா திரிபு கண்டறிப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *